சரும அழகை அதிகரிக்கும் ரோஸ் வாட்டர்


உங்கள் முகம்  மற்றும்  சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. இதை முறையாக பயன்படுத்தி வரும் போது சருமத்தில் உள்ள எரிச்சல், அதிகப்படியான எண்ணெய், வறட்சி, கருமை ஆகியவை நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  •   நீங்கள் தினமும் குளிக்கும்  நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
  •  வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையாகவும் மிருதுவாகவும் அழகாக இருக்கும்.
  • ரோஸ் வாட்டர் உள்ள பாட்டிலை அரை மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் மற்றும் கருவளையங்கள் குறைந்து, கண்கள் அழகாக மாறும்.
  • இரவில் படுக்கும் போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் மேக்கப் நீங்குவதோடு சருமமும் மென்மையோடு இருக்கும்.
  •  ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். இது முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும்.
  • பொதுவாக வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும்.
  •  கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

Comments