நரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா?

இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது.

இளநரையாக இருந்தாலும், சில முடிகளில் நரை விழுந்தாலும், முடி முழுக்க நரைத்தாலும் உடனே எல்லோரும் கருப்பாக்க முயற்சிப்பார்கள். கெமிக்கல் கலந்த ஹேர் டை எல்லாம் உடனே சட்டென்று முடியை கருப்பாக்க செய்யும். ஆனால் இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது.

மூலிகை ஹேர்டைக்கு பயன்படுத்த வேண்டிய பொருள்களில் மிக முக்கியமானது மருதாணி என்னும் ஹென்னா பொடியும், அவுரி இலையும். அவுரி இலை கருநீலம் கொண்டது. மருதாணி முடிக்கு இளஞ்சிவப்பை கொடுக்கும். பளீரென்ற வெள்ளை முடியை மருதாணி சிவப்பாக்கினால் அவுரி இலை தன்னுடைய கருநீல நிறத்தை கொண்டு கருமையாக்கும் இதுதான் மூலிகை ஹேர் டை என்று அழைக்கப்படுகிறது. இப்போது இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். மூலிகை ஹேர்டை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை சுத்தமாக்கிகொள்ளுங்கள்

நெல்லிக்காய் அளவு பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் சாறு பிழிந்து அந்த சாறில் சிறிதளவு நீர் விட்டு, இரண்டு டீஸ்பூன் அளவு டீத்தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அந்த நீரை வடிகட்டி மருதாணி பவுடர் 3 டீஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடுங்கள். மறுநாள் காலை தலையில் வேர்ப்பகுதி முதல் நுனி வரை நரை இருக்கும் இடங்களில் நன்றாக தடவி 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலைக்கு குளித்துவிடுங்கள். மைல்டாக ஷாம்பு போட்டால் போதுமானது.

ஒரே முறை மருதாணி பயன்படுத்திய உடன் வெள்ளை நிற முடி எல்லாமே வெளுத்த சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். மறுநாள் காலை அவுரி இலை பொடியை நீரில் குழைத்து கூந்தலில் தேய்த்து ஒரு மணி நேரம் விட்டுவிடுங்கள். இப்போது தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு எதையும் பயன்படுத்த வேண்டாம்.முடியில் இலேசான மாற்றம் இருக்கும். டை பயன்படுத்திய உடன் கருப்பு போன்று மாறாது.

அதிகமாக நரைமுடி இருப்பவர்களுக்கு 20 சதவீதம் மட்டுமே நிறம் வந்திருக்கும். எனினும் யோசிக்க வேண்டாம். இப்போது கொரானாவால் வீட்டில் தான் முடங்கியிருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு முறை இப்படியே முதல் நாள் மருதாணியை ஊறவைத்தும், மறுநாள் அவுரி பொடி பயன்படுத்தியும் வர வேண்டும். 10 முறை இதை முழுமையாக பயன்படுத்திய பிறகு உங்கள் முடியின் நிறம் நன்றாகவே மாறியிருக்கும் . இள நிற ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

பிறகு வாரம் இருமுறை அவுரி பொடியும், ஒரு முறை மருதாணி போட்டும் செய்துவந்தால் மூன்று மாதத்தில் முடியின் நிறம் நிச்சயம் மாறும். கூடவே உணவு பழக்கத்திலும் அக்கறை கொள்ளுக்கள். பிறகு இரசாயனம் இல்லாமல் முடி கருமையாக மாறுவதை ஆச்சரியத்தோடு பார்க்கலாம். 

Comments

  1. You write a very informative article. You can visit my site to read more about that.
    tailoring institutes in Chennai

    ReplyDelete
  2. Thank you for sharing best beauty tips and I hope keep posting more articles.

    ReplyDelete

Post a Comment