வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மூக்கில் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்கும் வழிமுறைகள் || Nose Blackheads Removal Home Remedies
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மூக்கில் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்கும் வழிமுறைகள்
மூக்கின் நுனியில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ் பலருக்கும் வருவதுண்டு. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே மீண்டும் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க முடியும்.
மூக்கின் நுனியில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ் பலருக்கும் வருவதுண்டு. முகத்தில் சருமத்துளைகள் அடைக்கும் போது உண்டாகும் பருக்களை போன்று மூக்கின் நுனியிலும் அடைப்பு உண்டாகி மூக்கில் கருப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் உண்டாகக்கூடும். சருமத்தை கவனிக்க தவறும் போது அவை அதிக எண்ணெய்பசையை உற்பத்தி செய்வதாலும், அங்கிருக்கும் இறந்த செல்கள் வெளியேறாததாலும் தொடர்ந்து அங்கு பிளாக் ஹெட்ஸ் உருவாகி வருகிறது. சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதன் மூலம் பிளாக் ஹெட்ஸ் தவிர்க்கலாம். பிளாக் ஹெட்ஸ் தவிர்க்க உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து சம அளவுடன் ஆப்பிள் சீடர் வினிகர் கலக்கவும். இரண்டும் நன்றாக பேஸ்ட் பதத்தில் குழைத்து கலந்து முகத்தில் மூக்கின் நுனி இருக்கும் பகுதியில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வெண்டும்.
ஆப்பிள் சீடர் வினிகர் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் சருமத்தை சுற்றி இருக்கும் நுண்ணுயிரி தொற்றுகளை தடுக்கிறது. மேலும் சருமத்தை ஆழமாக துடைத்து சுத்தம் செய்கிறது. முகத்தில் சருமத்தின் பிஹெச் அளவை சீராக பராமரிப்பதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை உற்பத்தியை தடுக்கிறது. முகத்தில் இருக்கும் நச்சுக்களை விலக்கி முகத்தை சுத்தமாக வைத்திருப்பதால் பிளாக்ஹெட்ஸ் குறைவதோடு அவை அதிகரிக்காமல் தடுக்கவும் செய்கிறது.
பிளாக் ஹெட்ஸ் இருக்கும் பகுதி நன்றாக கடினமாகவே இருக்கும். அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பு முதலில் முகத்துக்கு நீராவி பிடிக்க வேண்டும். அகல குறைவான மண் சட்டியில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் முகம் முழுக்க காட்ட வேண்டும். குறிப்பாக மூக்கு பகுதியில் மூக்கின் நுனியில் நன்றாக முகம் திருப்பி காண்பிக்கவும். பிறகு முகம் உலர்ந்ததும் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து முகத்திலும் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியிலும் தடவி விட வேண்டும். மறுநாள் காலை மூக்கின் நுனியை இலேசாக ஸ்க்ரப் செய்து கழுவினால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு நீங்கும். வாரம் ஒரு முறை இதை செய்தாலே போதுமானது.
ஓட்ஸ் போன்று நன்றாகவே வேலை செய்யகூடியது நாட்டு சர்க்கரை. இவை பக்கவிளைவே இல்லாமல் சருமத்துளைகளில் ஊடுருவி அங்கிருக்கும் கிருமிகளை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
நாட்டுசர்க்கரையுடன் தேன் கலந்து மூக்கின் நுனியில் மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இவை பிளாக்ஹெட்ஸ் துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி வேரோடு வெளியேற்றுகிறது. பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமாக கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு வேளை இதை செய்து வந்தால் போதுமானது.
கரித்தூள் மாஸ்க் கடைகளில் கிடைக்கும். அதை பிளாக் ஹெட்ஸ் பகுதியில் மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் இந்தபிரச்சனைக்கு உள்ளானவர்கள்.
கரித்தூள் மாஸ்க் முகத்தில் குறிப்பாக மூக்கின் நுனியில் அழுத்தமாக வைத்து நன்றாக உலரவிட்டு எடுக்க வேண்டும். இவை மூக்கின் நுனியில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சு எடுப்பதோடு மேலும் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. இதை பயன்படுத்திய பிறகு மூக்கு நுனியை அழுத்தமாக துடைத்து எடுத்தால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு வெளியேறுகிறது.
சரும அழகுக்கு உதவும் க்ரீன் டீ கலவையை கொண்டு பிளாக் ஹெட்ஸ்களையும் நீக்க முடியும். அதோடு அவை மேற்கொண்டு வராமலும் தவிர்க்க முடியும். அரை கல் நீரை கொதிக்க வைத்து, அதில் 4 டீஸ்பூன் அளவு க்ரீன் டீ பேக் கலந்து மேலும் கொதிக்க வைத்து இறக்கி சற்று ஆறிய பதம் வந்ததும் அதில் சர்க்கரை கலந்து நன்றாக பேஸ்ட் போன்று கலக்கவும். பிறகு இதை முகத்தில் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
ஸ்க்ரப் செய்யும் போது க்ரீன் தேயிலை சருமத்தில் இருக்கும் நச்சுகளை விரட்டி, முகத்தில் உள்ள எண்ணெய்பசையின் உற்பத்தியைக் குறைக்கிறது. தினமும் செய்யும் போது பிளாக்ஹெட்ஸ், கரும்புள்ளிகளையும் படிப்படியாக குறைக்கிறது.
மேற்கண்ட அனைத்தையும் மூக்கின் நுனியில் மட்டும் பயன்படுத்தாமல் முகம் முழுக்கவே பயன்படுத்தலாம். இவை கூடுதலாக முகப்பருக்களையும், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் கூட நீக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment